எப்படி அங்க போனீங்க..? யார் அனுமதி கொடுத்தது..? கேப்டன் கோலி, ரவி சாஸ்திரிக்கு ‘செக்’ வைத்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் சதம் அடித்த ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற புத்தக அறிமுக விழாவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி உட்பட வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
ஆனால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் யாரும் 4-வது டெஸ்ட்டில் பங்கேற்வில்லை.
இந்த சூழலில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதால், அவர்கள் அனைவரும் இப்போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு செல்ல யார் அனுமதி கொடுத்தார்கள்? உடனே இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி விளக்கம் கொடுக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.