இந்த ப்ளானோட தான் இங்கிலாந்து வந்தோம்... ஆனா நடக்காம போயிருச்சு.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில துணைக் கேப்டனே ‘ஆப்பு’ வைக்கும் கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற உள்ள வீரர்கள் குறித்து கேப்டன் கோலி சூசகமாக பதிலளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஒரு வீரர்கள் கூட 20 ரன்களை தாண்டாதது அதிர்ச்சியளித்துள்ளது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. பேட்டிங்கில் சொதப்பியதுபோல பவுலிங்கிலும் இந்தியா கோட்டை விட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது.
தோல்விடைந்தது குறித்து பேசிய கேப்டன் கோலி, ‘ஹெடிங்லி மைதானம் நன்றாக இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்களை எடுத்ததால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிகமான ரன்களை குவித்தது. ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அப்படியிருந்தும் இங்கிலாந்து பவுலிங் சவால் அளிக்கும் வகையில் இருந்தது.
இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை எந்த பிர்ச்சனையும் இல்லை. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என சரியாக உள்ளது. ஆனால் மிடில் ஆர்டரில் பேட்டிங் சொதப்பியதுதான் தோல்விக்கு வழி வகுத்தது. இது மிக நீண்ட டெஸ்ட் தொடர் என்பதால் சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்கலாம் என திட்டம் வைத்திருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு அணியே தொடர்ந்து விளையாடி வருகிறது’ என கோலி கூறினார்.
இதன்மூலம் அடுத்து நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. இதில் தொடர்ந்து சொதப்பி வந்த புஜாராதான் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-வது டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் தனது ஃபார்மை அவர் நிரூபித்துள்ளார்.
இதில் அடுத்த இடத்தில் இருப்பது துணைக் கேப்டன் ரஹானேதான். நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அதிகளவிலான ரன்களை அவர் எடுக்கவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.