தொடர் கேப்டன்ஸி சர்ச்சைகள்... கோலி குறித்து மனம் திறந்த ரோகித் சர்மா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Rahini Aathma Vendi M | Dec 13, 2021 04:29 PM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா. இனி இந்தியாவை ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டுகளில் ரோகித் தான் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விராட் கோலி, இனிமேல் கேப்டனாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

rohit sharma opens up about virat kohli\'s captaincy

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி விராட் கோலி, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது. அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்கு கடந்த பல ஆண்டுகளாக தலைமை தாங்கி, கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார் ரோகித். இதனால் அவரின் தலைமை, இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுக்கும் என்று வரவேற்பும் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படி விவாதங்கள் ஒரு பக்கம் இருப்பினும் ரோகித் சர்மா, விராட் கோலியின் தலைமைக்குக் கீழ் இந்திய அணிக்கு விளையாடியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர், ‘எப்போதும் அணியை முன்னோக்கி மட்டுமே நகர்த்திச் செல்வார் விராட் கோலி. கடந்த ஐந்து ஆண்டுகளாக விராட் கோலி கேப்டனாக இருந்த காலக்கட்டம் முழுவதிலும் அவர் தான் அணியை முன்னின்று வழி நடத்திச் சென்றுள்ளார். அனைத்துப் போட்டிகளையும் வென்று விட வேண்டும் என்கிற முனைப்பும் முயற்சியும் எப்போதும் அவரிடத்தில் இருந்தது.

அது தான் அவர் அணிக்கு எப்போதும் கொடுக்கும் செய்தியாக இருந்தது. அவருக்கு கீழ் விளையாடியது எப்போதும் மறக்க முடியாத அனுபவமாகும். நான் அவரோடு இணைந்து பல காலமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். நான் அவரோடு இணைந்து பயணித்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தேன். தொடர்ந்து அனுபிவிப்பேன்.

இந்தியா, ஒரு அணியாக தன்னை திறம்பட மாற்றிக் கொள்வது அவசியமாகும். அது தான் எல்லோருடைய கவனமாகவும் இருக்கும். தொடர்ந்து எங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்றேவது தான் இனி எங்கள் இலக்கு’ என்று தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா, இந்திய அணிக்குத் தலைமை தாங்க வேண்டும் வெகு நாட்களாக முன்னாள் வீரர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சுனில் கவாஸ்கர், கவுதம் கம்பீர் போன்றவர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  ரோகித் சர்மாவே கேப்டனாக இருக்க சரியான நபர் என்று கடந்த சில மாதங்களாகவே தெரிவித்து வருகின்றனர்.

எதிர் வரும் தென் ஆப்ரிக்கத் தொடரில் அதிரடி மன்னன் ரோகித் சர்மா, இந்தியாவின் கேப்டனாகவும் களம் காண உள்ளார். வரும் 26 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க உள்ளது. அந்த அணிக்கு விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்கும்.

Tags : #CRICKET #VIRAT KOHLI #ROHIT SHARMA #TEAM INDIA #விராட் கோலி #ரோகித் சர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma opens up about virat kohli's captaincy | Sports News.