VIDEO: 'தம்பி' உங்கள இதுக்காகத்தான்.. பாதியில 'வீட்டுக்கு' அனுப்பி வச்சோமா?.. மீண்டும் 'சொதப்பிய' இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 25, 2019 09:57 PM
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து, அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இளம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அணியில் சேர்க்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பிடிப்பார். ஆனால் தற்போது அவரின் பார்ம் சரியில்லை என்பதால் அதற்கு முன்பாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடவைக்க பிசிசிஐ முடிவு செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பியது.
ஆனால் அங்கும் அவர் விக்கெட்டை பறிகொடுத்த விதம் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஹரியானா- டெல்லி அணிகள் மோதிய போட்டியில் பண்ட் டெல்லி அணி சார்பாக ஆடினார். 32 பந்துகளில் பண்ட் 28 ரன்கள் எடுத்தபோது ஒரு அவசர ஷாட்டை ஆட ஆசைப்பட்டு தன்னுடைய விக்கெட்டை சுமித் குமாரிடம் பறிகொடுத்தார்.
இறுதியில் ஹரியானா, டெல்லி அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹரியானா அணிக்காக ஆடிய சாஹல் 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணை செய்தார். பண்ட்டுக்கு பயிற்சி தேவை என்றுதான் அவரை சையது அலி முஷ்டாக் டி20 கோப்பையில் பிசிசிஐ ஆட வைத்தது. ஆனால் அங்கும் அவர் தனது விக்கெட்டை மிகவும் மோசமான முறையில் பறிகொடுத்து மீண்டும் நெட்டிசன்கள் வாய்க்கு அவலாக மாறியுள்ளார்.
