VIDEO: ரன் எடுக்குற ‘அவசரத்துல’ அவரு நின்னத கவனிக்கல.. ‘நெஞ்சில’ அடிச்சு கீழே விழுந்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி இன்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரன் மற்றும் டு பிளிசிஸ் களமிறங்கினர். இதில் சாம் குர்ரன் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய வாட்சனுடன் ஜோடி சேர்ந்த டு பிளிசிஸ் நிதானமாக ஆட ஆரம்பித்தார். இதில் டு பிளிசிஸ் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதனை அடுத்து வாட்சனும் 36 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய அம்பட்டி ராயுடு அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 58 ரன்களை அடித்தார். அதேபோல் கடைசியாக களமிறங்கிய ஜடேஜா 13 பந்துகளில் 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது.
— faceplatter49 (@faceplatter49) October 17, 2020
Jadu ki jhapi. #duplessis #RABADA 😂✨❤️ pic.twitter.com/eBbsRtlAsk
— Rishita 💛 (@in_cloudsss) October 17, 2020
இந்த நிலையில் இப்போட்டியில் டு பிளிசிஸ் ரன் எடுக்க ஓடி வரும்போது டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மீது மோதி கீழே விழுந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
