'இதுக்கா உருட்டிகிட்டு இருந்தீங்க.. இந்தாங்க சிக்ஸர்!'.. ‘மாத்திரையை தூக்கி போட்டுவிட்டு.. சூப்பர் ஓவரில் ‘கேம் சேஞ்சராக’ மாறிய ‘தி பாஸ்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 19, 2020 01:35 PM

ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் தற்போது அதிரடியாக ஆடிய கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியின் கேம் சேஞ்சராகவே மாறியுள்ளார். 10க்கும் மேற்பட்ட ஐபிஎல் சீசன்களில் ஆடிய கெயில் கடந்த இரண்டு சீசனாக சரியாக ஆட முடியாமல் இருந்த நிலையில்  2017ல் பெங்களூர் அணிக்காக கெயில் சரியாக ஆட முடியாமல் இருந்தார்.

IPL2020: game changer Gayle in super over KXIPvsMI match

2018 சீசனிலும் கேப்டன் அஸ்வின் கெயிலை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என்கிற விமர்சனம் உண்டு. 2019 சீசனிலும் கெயிலை பெரிய அளவிற்கு பஞ்சாப் அணி பயன்படுத்தவில்லை. இந்த வருடமும் தொடக்கத்தில் கெயிலை பயன்படுத்தாமல் பஞ்சாப் அணி, இடையில் இவரை களமிறக்க வேண்டிய சூழ்நிலை உருவான போதும் கெயிலால் பேட்டிங்கில் இறங்க முடியாமல் போனது.

அதற்குக் காரணம் கேயில் சாப்பிட்ட உணவு புட் பாய்சன் ஆகியதால், மருத்துவமனையில் கிடந்தார். கடந்த வாரமும் இவர் மருத்துவமனையில் இருந்தார். அதிக நீர் சத்தை இழந்து கஷ்டப்பட்ட கெயிலுக்கு 40 வயதிற்கும் மேல் ஆகிவிட்டது. அவரது உடலில் நீர்ச்சத்து இல்லை. இந்த நிலையிலும் கடும் வெப்பநிலையில் அவர் களமிறங்குவதே கஷ்டம் என்று முடிவே செய்தார்கள் பல ரசிகர்கள். பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு முன்னர், தன் கையில் இருந்த மாத்திரையை எறிந்துவிட்டு கெயில் பேட்டை கையில் தூக்கியுள்ளார். பெங்களூருக்கு எதிராக பஞ்சாப் அணி மோதிய ஆட்டத்தில், ஒன் டவுன் இறங்கிய கெயில் 45 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதில் அரை சதம் அடித்த இவர் 5 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார்.

ஒரு வருடம் கழித்து தற்போது பேட்டிங்கில் இறங்கியுள்ள கெயில், உடல் சிக்கல் மற்றும் ஒரு வருடம் ஆடவில்லை என்கிற எந்த சுவடுமின்றி முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து, தான் மாஸ், தான்தான் பாஸ் என்பதை நிரூபித்தார். அத்துடன் தனது பேட்டில் இருந்த ‘தி பாஸ்’ வாசகத்தை உயர்த்தி காட்டி விமர்சனங்களுக்கு ஒரே மேட்சில் பதிலடி கொடுத்தார். இதேபோல் நேற்று நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ் நிலையில் கெயில் முதல் பந்திலேயே 6 அடித்து கேம் சேஞ்சராக மாறி, பஞ்சாப் அணியின் வெற்றி தீர்மானித்தார்.  2020 ஐபிஎல் சீசனில் போடப்பட்ட சூப்பர் ஓவர்களில் சிக்ஸ் அடித்த ஒரே வீரர்  40+ வயதான கெயில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020: game changer Gayle in super over KXIPvsMI match | Tamil Nadu News.