‘இறுதிவரை போராடிய வார்னர்!’.. ‘மிரட்டி எடுத்த பெர்குசன்!’... சூப்பர் ஓவரில் ‘கொல்கத்தா’ த்ரில் ‘வெற்றி!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் கேப்டன்ஷிப்பிலான ஐதராபாத் அணி, இயான் மோர்கன் கேப்டன்ஷிப்பிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இதில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தது ரிஸ்க் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி உள்ளிட்டோருக்கு முதலில் களமிறங்கி 23 ரன்களை 16 பந்துகளில் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 14 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் ஆடினார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்திருந்தது.
இதனை அடுத்து 164 என்கிற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசிவரை போராடி கடைசியில் போட்டியை சமன் செய்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடி வந்த டேவிட் வார்னர் ஒரு ரன்னை எடுத்து போட்டியை சமன் செய்தார். இதனை அடுத்து தொடங்கிய சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில்லாக வெற்றிபெற்றது. இதில் பெர்குசனின் பவுலிங் பாராட்டப்பட்டு வருகிறது.