'ஒரே நாளில் 2 சூப்பர் ஓவர்'.. மட்டுமில்ல.. 'இது' ‘அதுக்கும் மேல’.. ‘இணையத்தில்’ ட்ரெண்ட் ஆகும் ‘சண்டே’ ஐபிஎல் போட்டிகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று (அக்டோபர் 18,2020) ஒரே நாளில் 2 ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவர் அரங்கேறியுள்ளது.
முன்னதாக ஆடிய ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியும் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த சூழலில் ஹைதராபாத் அணி இருந்தபோது, அந்த அணி ஒரு ரன் எடுக்க, போட்டி சமனுக்கு வந்தது.
அதன் பின் நடந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வென்றது.
#MIvsKXIP: Super Sunday witnesses 2nd Super Over for the first time in IPL - https://t.co/pTQdItuiZi pic.twitter.com/cDb9ReWvMR
— Sify.com (@sifydotcom) October 18, 2020
இதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் 2 ரன்கள் தேவைப்பட்டபோது 1 ரன் எடுத்ததால் போட்டி சமனுக்கு வந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் போட்டி சமனுக்கு வந்ததால், 2வது சூப்பர் ஓவர் நடந்தது. இதில் பஞ்சாப் அணி த்ரில்லாக வெற்றி பெற்றது.
Make it count for the previous Super over loss guys. #MIvsKXIP pic.twitter.com/YIrUp5lufu
— Tro Lee ᴹᴵ (@Tro_Lee_) October 18, 2020
இப்படி ஒரே நாளில் 2 சூப்பர் ஓவர், அதிலும் இரண்டாவது சூப்பர் ஓவர் என இன்றைய ஐபிஎல் போட்டி த்ரில்லராகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் துபாயில் நடந்துள்ளது.