'நடராஜன்' போட்ட 'இன்ஸ்டா' ஸ்டோரி.. "அப்போ அடுத்த 'மேட்ச்' சம்பவம் இருக்கு போல.." குதூகலத்தில் 'இந்திய' ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான நான்காவது டி 20 போட்டி, தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில், ஒன்றில் மட்டுமே இந்திய அணி வெற்றி கண்டுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி ஆடி வருகிறது. இதனிடையே, இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன், இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை தனது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன், காயம் காரணமாக இதுவரை களமிறங்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு, தனது குவாரன்டைனையும் முடித்து திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாஷிங்டன் சுந்தருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், 'இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது சிறப்பாக உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இன்றைய போட்டியில் நடராஜன் களமிறங்காத நிலையில், கடைசி டி 20 போட்டியில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்படாத நிலையில், நடராஜன் காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளதால், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்றும் கருதப்படுகிறது.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற நடராஜன், சில வீரர்கள் காயம் அடைந்ததால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி, தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்தி, தனது முத்திரையை பதித்து அனைவரையும் அசர வைத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
