"என்னங்க நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க??... " கடுப்பில் 'கோலி' கொடுத்த 'ரியாக்ஷன்'... பரபரப்பு சம்பவம்!! - 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான நான்காவது டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடி வரும் நிலையில், முன்னதாக, இந்திய வீரர் சூர்யகுமார் அவுட்டான விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சாம் குர்ரான் பந்து வீச்சில், அவர் அடித்த ஷாட், டேவிட் மலானின் கைக்குச் சென்றது. மலான் பந்தை கீழே வைத்தது போல தெரிந்த நிலையில், முடிவு மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, ரீப்ளேயில் பந்து தரையில் படுவது போல தெரிந்த நிலையில், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தது, அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Third Umpire 🤬💦 pic.twitter.com/jrcBDsKWFg
— PSPK AMBATI 🔥 (@PspkAmbati) March 18, 2021
இந்நிலையில், சூர்யகுமார் அவுட் என அறிவிக்கப்பட்டதும், இந்திய கேப்டன் கோலி, மைதானத்தில் இருந்து கோபத்தில் கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கையை நீட்டி, தவறான முடிவை அளித்து விட்டனர் என்பது போல, தனது கடுப்பை கோலி வெளிப்படுத்தினார்.
I got the same feeling Mc umpire and England pic.twitter.com/RNBPUJHH1J
— King 🤴🇮🇹 (@Pran33Th__18) March 18, 2021
சூர்யகுமாரின் சர்ச்சை விக்கெட்டை, சேவாக், வாசிம் ஜாஃபர், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
