‘என்னா அடி’!.. பெங்களூரு பந்துவீச்சை பிரிச்சு மேஞ்ச ‘முன்னாள்’ RCB ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு மற்றும் டெல்லி அணிக்கு இடையேயான ஐபிஎல் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்களும், தவான் 28 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். அடுத்த வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
ரிஷப் பந்த் 25 பந்துகளில் 37 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து அசத்தினர். இதில் மார்கஸ் ஸ்டோனிஸ் கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சார்பாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் ஆர்சிபி ப்ளேயரான ஸ்டோனிஸ் இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
A brilliant knock from Marcus Stoinis against his former team.#MarcusStoinis #DC #IPL2020 #Cricket #CricTracker
( 📷 Source: IPL/BCCI) pic.twitter.com/hwFJgxs2cl
— CricTracker (@Cricketracker) October 5, 2020
Marcus Stoinis Proving His Worth!
.
.#DelhiCapitals #MarcusStoinis pic.twitter.com/hM7J1HLiGE
— CRICKETNMORE (@cricketnmore) October 5, 2020
Jzt a reminder:
Stoinis played for RCB last season #IPL2020 #DCvKXIP pic.twitter.com/8fYKJaS6gS
— SAHIL #CSK #DC (@sahil9_s) September 20, 2020