நாங்க இந்தியாவ விட்டு கெளம்புறோம்...! 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி...' - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Apr 16, 2021 11:50 AM

இந்தியாவில் இயங்கிவரும் சிட்டிபேங்க் குழுமம், இந்தியாவிலிருந்து விலகப்போவதாகவும், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

Citibank Group has also announced its exit from India

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான சிட்டி வங்கி, அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாகும். இந்தியா, சீனா உட்பட 13 நாடுகளில் செயல்பட்டு வரும் சிட்டு குழுமம் தற்போது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற ஜேன் ஃபிரேசரின் முதல் அதிரடி நடவடிக்கையாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

சிட்டி குழுமம் அறிவித்துள்ள அறிக்கையில், அமெரிக்காவை தவிர்த்து பிற சந்தைகளில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்காரணமாக, சிட்டிகுரூப் குழுமம் சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங் காங் என 4 சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது.

அதன்காரணமாக சிட்டி வங்கி விரைவில் இந்தியா, சீனா உட்பட 13 சர்வதேச சந்தைகளில் இருந்து சில்லறை வங்கி செயல்பாட்டு சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, போலந்து, சீனா, மலேசியா, பஹ்ரைன், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தைவான் ஆகிய 13 நாடுகளில் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்துள்ளது. ஆனால் சிட்டி குழுமம் எப்போதிலிருந்து வெளியேற போகிறது என்பதை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் இயங்கி வரும் சிட்டி வங்கியின் நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் சிட்டி வங்கியில் சுமார் 12 லட்சம் வங்கி சேவை பெறுவதாகவும், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள் 2.9 மில்லியன் அதாவது சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'எங்கள் வங்கி சேவைகளை நாங்கள் நிறுத்தவில்லை, வெளியேற மட்டும் தான் செய்வோம். நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் உடனடியாக ஏற்படாது. அதோடு இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

தற்போது நாங்கள் இந்திய நுகர்வோர் வணிக பிரிவுக்கு வாங்குபவரைத் (buyer) தேடுகிறோம். அதன்பின் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெறுவோம்' என சிட்டி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Citibank Group has also announced its exit from India | Business News.