'ராஜா மாதிரி இருந்தவரு... இன்னைக்கு டீம்ல கூட வாய்ப்பு கிடைக்கல'!.. சீனியர் வீரரையே ஓரமாக உட்கார வைத்த 'பண்ட்'!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் முக்கியமான வீரர் ஒருவரை பண்ட் ஓரம்கட்டியுள்ளார்.

சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. பிட்ச் பவுலிங் செய்ய முதல் இன்னிங்சில் சாதகமாக இருக்கும் என்பதால் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் டெல்லி அணி வித்தியாசமான வீரர்களுடன் களமிறங்கி உள்ளது. டெல்லி அணியில் இருக்கும் இஷாந்த் சர்மா உட்பட பலர் வீரர்கள் காயம் காரணமாக இன்று களமிறங்கவில்லை. ராபாடா, ஆண்ரிச் இன்னும் அணியில் இணையவில்லை. இதனால் அவர்களும் அணியில் இல்லை.
இதன் காரணமாக, டெல்லி அணியில் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், டாம் கரண் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் டெல்லி அணியில் இன்று மூன்றாவது இடத்தில் ஸ்மித் எடுக்கப்படவில்லை. மாறாக இங்கு ரஹானே இறங்குகிறார்.
ஸ்மித் மிகவும் வலிமையான வீரர். முன்னாள் ராஜஸ்தான் கேப்டன். ஆனால், அவரையே பண்ட் ஓரம் கட்டி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் துணிச்சலாக இந்த முடிவை பண்ட் எடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத வெற்றிடத்தை ஸ்மித்தை பயன்படுத்தி நிரப்பி இருக்கலாம் என்றும், டெத் ஓவர்களில் நின்று விளையாடி அணியை வெற்றிபெறச் செய்யக்கூடிய ஆற்றல் உடையவர் என்றும், ஸ்மித்துக்காக சிலர் வாதாடுகிறார்கள்.
இந்நிலையில், 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே அணியில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக பண்ட் இந்த முடிவை துணிச்சலாக எடுத்து இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எதை பற்றியும் கவலைப்படாமல் ஸ்மித்தை பண்ட் உட்கார வைத்துள்ளார். ஸ்மித் இல்லாமல் டெல்லி அணியின் பேட்டிங் கொஞ்சம் வலிமை இல்லாமலே இருக்கிறது.
இன்று ஆடும் டெல்லி அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரஹானே, பண்ட், ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவ்ஸ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்
