"நல்லா போயிட்டு இருந்த 'மேட்ச்'.. திடீரென 'ட்விஸ்ட்' கொடுத்த 'நடுவர்கள்'.. அதிர்ந்து நின்ற 'டுபிளஸ்ஸி'.. 'குழம்பி' போன 'ரசிகர்கள்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக, டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, தங்களது வெற்றிக் கணக்கை இந்த சீசனில் தொடங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணியால எடுக்க முடிந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. இதனிடையே, போட்டிக்கு நடுவில், சென்னை வீரர் டுபிளஸ்ஸி (Du Plessis) பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் ஒன்று, வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 14 ஆவது ஓவரை பஞ்சாப் அணி வீரர் மெரிடித் வீசினார். அப்போது, அவர் வீசிய பந்து பவுன்சராக சென்றது.
இந்த பந்தை எதிர்கொண்ட டுபிளஸ்ஸியின் கை கிளவ்ஸில், பந்து பட்டுச் சென்றதாக, பஞ்சாப் அணி வீரர்கள் அவுட்டிற்கு அப்பீல் செய்தனர். தொடர்ந்து, போட்டி நடுவர் அனில் சவுத்ரியும் அவுட் கொடுக்க முயன்றார். ஆனால், அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு ஷார்ட் பால் போடப்பட்டதால், இந்த பந்தும் ஷார்ட் பால் என்றால் அது நோ பாலாக அறிவிக்கப்படும் என்பதால், அனில் சவுத்ரி, சக நடுவருடன் இதுகுறித்து ஆலோசித்தார்.
— Aditya Das (@lodulalit001) April 16, 2021
இதன் பிறகு, மூன்றாம் நடுவர் வீரேந்தர் ஷர்மாவிடம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அந்த பந்து பவுன்சர் இல்லை என வீரேந்தர் ஷர்மா கூற, அனில் சவுத்ரியும் அவுட்டில்லை என கூற முயன்றார். ஆனால், மூன்றாம் நடுவர் எதையும் கவனிக்காமல் அவுட் கொடுக்க கூறியதும், கள நடுவர் அனில் சவுத்ரி அவுட் என அறிவித்தார்.
— Aditya Das (@lodulalit001) April 16, 2021
இதனால், சற்று அதிர்ந்த டுப்ளஸ்ஸி, மீண்டும் அப்பீல் செய்தார். அதன் பிறகு தான், பேட்டில் பட்டதா இல்லையா என்பதையே மூன்றாம் நடுவர் ஆராய்ந்தார். அப்போது, பேட்டில் பந்து படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு, இறுதியில் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.
You can go to the third umpire to check the height of a bouncer now? #PBKSvsCSK
— Jimmy Neesham (@JimmyNeesh) April 16, 2021
I want third umpire to come and check what's wrong with my life #IPL2021 #CSKvPBKS #csk #PBKS #PBKSvCSK #PBKSvsCSK
— Samarth Oza (@SamarthOza711) April 16, 2021
ஷார்ட் பால் பரிசோதிக்க போய், பந்து பேட்டில் பட்டதா என்பதை கவனிக்காமல், அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்து, மீண்டும் அவுட்டில்லை என்பது தெரிய வந்ததையடுத்து, நடுவரின் செயல்களால் போட்டிக்கு இடையே சிறிது நேரம் குழப்பம் நீடித்தது. கடைசி வரை களத்தில் நின்ற டுபிளஸ்ஸி, 36 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
This is #3rd rated poor umpiring in international cricket. #CSKvPBKS#anilchoudary #IPL2021 #PBKSvCSK #Meredith #duplessis #thirdumpires #drs #Review pic.twitter.com/CvmLThD8fp
— John Paul Pious Cruz (@johncruz1503) April 16, 2021