141 வருஷ ரெக்கார்டு.. சல்லி சல்லியா நொறுக்கிய இளம் ஆஸி. வீரர்.. யாரு சாமி நீ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டோட் மர்பி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமாகி இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பியிருந்தார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ராகுல் 20 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும், மற்றொருபக்கம் நிலைத்து ஆடிய ரோஹித் சதமடித்து ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இருப்பினும் ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முயன்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் டோட் மர்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திகைப்படைய செய்தார். இது அவருடைய அறிமுக போட்டி. இதுவே தற்போது சாதனையாகவும் அமைந்திருக்கிறது. 141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 23வது பிறந்தநாளுக்கு முன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இளம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மர்பி பெற்றுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் பால்மர் இந்த சாதனையை படைந்திருந்தார். அப்போது அவருடைய வயது 22 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 26 நாட்கள் ஆகும். தற்போது மர்பி அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். ஏனெனில் தற்போது மர்பியின் வயது 22 ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் 26 நாட்கள் ஆகும். ஆகவே, மிக இளம் வயதில் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை மர்பி படைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸி . அணியை பொறுத்தவரையில் இதற்கு முன்னரே பல வீரர்கள் தங்களது அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் இத்தனை இளம் வயதில் இந்த சாதனையை படைத்திருப்பது மர்பி மட்டுமே.

மற்ற செய்திகள்
