மனைவி பக்கத்துல இருக்கும் போதே.. விராட் கோலிக்காக ரசிகர் வைத்திருந்த பதாகை.. "ஆனாலும் ரொம்ப தில்லுப்பா தலைவனுக்கு"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 10, 2023 09:29 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.

Virat Kohli fan placard in ind vs aus test match gone viral

                             Images are subject to © copyright to their respective owners

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 120 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகவே, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் படேல் 52 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். ஐந்து விக்கெட்டுகள் எடுத்து பட்டையைக் கிளப்பியிருந்த ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி 50 ரன்களை கடந்துள்ளார்.

Virat Kohli fan placard in ind vs aus test match gone viral

Images are subject to © copyright to their respective owners

இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை வகிக்கும் சூழலில் இன்னும் மூன்று நாட்கள் மீதம் உள்ளது. இதனால் மூன்றாவது நாளில் சிறப்பாக ஆடி இந்திய அணி ரன் குவிக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பதாகை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது.

Virat Kohli fan placard in ind vs aus test match gone viral

Images are subject to © copyright to their respective owners

கிரிக்கெட் போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவர், தனது கையில், "நான் எனது மனைவியை விட விராட் கோலியை தான் அதிகம் விரும்புகிறேன்" என குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்றை கையில் வைத்திருந்தார். மேலும் அவருடன் அவரது மனைவியும் அங்கே அருகில் இருந்ததாக தெரிகிறது. மனைவி அருகில் இருக்கும் சூழலிலேயே அவரை விட விராட் கோலியை தனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட பதாகையை ரசிகர் வைத்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Tags : #VIRATKOHLI #IND VS AUS #FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli fan placard in ind vs aus test match gone viral | Sports News.