‘பவுன்சரில் கழன்ற ஹெல்மெட்’... ‘தாடையை பதம் பார்த்த பந்து’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 11, 2019 04:57 PM

ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரின் பவுன்சரை எதிர்கொள்ளும்போது தாடையை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alex Carey Cops A Chin Injury From Jofra Archer’s Bouncer

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம், பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டேவிட் வார்னர் (9), ஆரோன் பிஞ்ச் (0), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார்.

8-வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜாப்ரா ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அலெக்ஸ் கேரி எதிர்கொண்டார். பவுன்சராக வீசிய பந்து சற்றும் எதிர்பார்க்காத வகையில், அலெக்ஸ் கேரியின் ஹெல்மெட்டை தாக்கியது. அதில் ஹெல்மெட் கழன்றது. பந்து தாடையை பலமாக தாக்கியது. இதனால் அலெக்ஸ் ஹேரிக்கு ரத்தம் சொட்டியது. 

பின்னர் ஆஸ்திரேலிய அணி மருத்துவ குழு அலெக்ஸ் கேரிக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அலெக்ஸ் கேரி விளையாட மாட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரத்தக்காயத்துடன் அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி 70 பந்திற்கு 46 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.