'வேண்டாம் கோலி!.. அவசரப்பட்டு 'அந்த' தப்ப பண்ணிடாதீங்க!'.. டி20 உலகக் கோப்பைக்காக... கோலி எடுத்த அதிரடி முடிவு!.. முன்னாள் வீரர் கடும் எதிர்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்காக விராட் கோலி எடுத்திருக்கும் முடிவு ஆபத்தானது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என ஐசிசி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த தொடருக்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் ஓப்பனராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்குவார்கள். இந்த முறை கே.எல்.ராகுலும் போட்டியில் உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தற்போது ஓப்பனிங் இடத்திற்கு போட்டி போடுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓப்பனராக களமிறங்கினார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டார். பின்னர் பேசிய அவர், தேவை ஏற்படுமாயின் நான் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவேன் என அதிரடியாக அறிவித்திருந்தார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில் கோலி ஓப்பனராக களமிறங்குவது கிட்டதட்ட உறுதியானது.
இந்நிலையில், அதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "டி20 உலகக் கோப்பையில் கோலி, வழக்கமான மூன்றாவது இடத்தில் களமிறங்கினால்தான் சரியாக இருக்கும். அதுவே அணிக்கு நல்ல சமநிலையைத் தரும். ரோகித்துடன், கே.எல்.ராகுலை களமிறக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஓப்பனர்களாக களமிறங்கும் பட்சத்தில் அடுத்தடுத்து கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்க ஏதுவாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
கே.எல். ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த சில தொடர்களில் ஓப்பனிங் களமிறங்கி சொதப்பி வருகின்றனர். எனவே, அவர்களை இனி நம்ப வேண்டாம் என்பதற்காகவே விராட் கோலி ஓப்பனிங் களமிறங்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க கூடாது என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.