"'இந்த' விஷயத்துல... மத்த எல்லாரையும் 'ஓரம்' கட்டிட்டு நம்மாளு தான் டாப்பு..." 'ஐபிஎல்' தொடரில் 'மெர்சல்' காட்டிய 'தமிழன்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வரும் நிலையில், இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த தமிழக வேகப் பந்து வீச்சாளரான நடராஜன், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில், அபார சாதனை ஒன்றை செய்துள்ளார். அதாவது, இந்த தொடரில் இதுவரை அதிக யார்க்கர் பந்துகளை வீசிய பந்து வீச்சாளர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மொத்தம் 21 யார்க்கர் பந்துகளை நடராஜன் இதுவரை வீசியுள்ளார். உலக அரங்கில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் உள்ள போதும், அவர்களை விட யார்க்கர் பந்துகளை துல்லியமாக நடராஜன் வீசியுள்ளார். இவருக்கு அடுத்த படியாக, டாம் குர்ரான், சாம் குர்ரான் ஆகியோர் உள்ளனர். நடராஜன் தமிழகத்தை சேர்ந்த வீரர் என்பதால் தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவருக்கு பாராட்டைத் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Bowled Most Yorkers in this IPL. That too ahead of World class bowlers like Bumrah, Boult, Rabada and Cummins.
Our own @Natarajan_91 ruling #IPL2020 with his Yorkers like a boss 😍🔥#mivssrh #mivsrh #srhvsmi #srhvmi #tnatarajan #blacksheepsports #blacksheep #cricanandha pic.twitter.com/hVJdk0SRpR
— Haamid Yuvan (@haamidyuvan) October 4, 2020
மிகச்சிறந்த முயற்சி #ThangarasuNatarajan, maximum yorkers for a team by any bowler 👏🏼 #ProGyaan #IPL2020 #MIvsSRH
— Pragyan Ojha (@pragyanojha) October 4, 2020

மற்ற செய்திகள்
