VIDEO : 'சேலம்' டூ 'ஐபிஎல்'... தடையைத் தாண்டி முத்திரை பதித்த 'தமிழக' வீரரின் 'INSPIRING' ஸ்டோரி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தற்போது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், யார்க்கர் பந்துகளை மிகத் துல்லியமாக வீசி வரும் நிலையில், பிரெட் லீ ஆரம்பித்து பல முன்னணி வீரர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தின் சேலம் பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்து இன்று கிரிக்கெட் உலகே திரும்பி பார்க்கும் அளவுக்கு திறம்பட செயல்பட்டு வரும் நடராஜன் வாழ்க்கை குறித்த வீடியோ ஒன்றை சன் ரைசர்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் நடராஜன், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தான் எப்படி கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார் என்பது குறித்து விளக்குகிறார். 'சிறு வயதில் அதிகம் டென்னிஸ் பந்துகளில் தான் விளையாடியுள்ளேன். 20 வயதில் தான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. ஆரம்பத்தில் நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஷூ, உடைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டேன்' என்றார்.
அதனைத் தொடர்ந்து, தனது முன்பிருந்த தடைகளை தாண்டி இன்று முக்கிய வீரராக நடராஜன் வலம் வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக பஞ்சாப் அணிக்காக ஆட தேர்வானதும், பின் சன் ரைசர்ஸ் அணிக்காக தற்போது ஆடிக் கொண்டிருப்பதும் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அதே போல, அவர் கிரிக்கெட் பக்கம் திரும்ப மிக முக்கிய காரணமாக இருந்த JP என்கிற ஜெயபிரகாஷ் குறித்தும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். தனது வாழ்வின் திருப்புமுனையாக இருந்த கிரிக்கெட் போட்டிக்கு காரணமாக இருந்த JP பெயரை தனது பெயருடன் இணைத்து தான் அணிந்துள்ள ஜெர்சியிலும் வைத்துள்ளார். இது தொடர்பாக அழகிய தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோவை காண கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்க:
The story of T. Natarajan 📖
Hear all about the pacer's journey from the man himself 🧡#OrangeArmy #KeepRising #Dream11IPL @Natarajan_91 pic.twitter.com/KIsPaHJ6aB
— SunRisers Hyderabad (@SunRisers) October 4, 2020