‘சார்.. கொஞ்சம் இருங்க..’ நிருபர் கேட்ட கேள்வி.. கடுப்பாகி சூர்யகுமார் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 08, 2022 10:22 PM

ஆஸ்திரேலிய வீரருடன் ஒப்பிட்டு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சூர்யகுமார யாதவ் பதிலளித்துள்ளார்.

Suryakumar reply to journalist on comparison with Michael Bevan

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை (09.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பங்கேற்று பேசினார். அப்போது அவரையும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் பெவனையும் ஒப்பிட்டு நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Suryakumar reply to journalist on comparison with Michael Bevan

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், ‘சார்.. கொஞ்சம் இருங்க... என்னை சூர்யகுமாராகவே இருக்க விடுங்கள். இந்திய அணிக்காக மிகவும் குறைவான போட்டிகளில்தான் நான் விளையாடி உள்ளேன். ஆனால் ஒன்றை மட்டும் நான் தொடர்ந்து செய்வேன். எனக்கு எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதன் மூலம் அணியை வெற்றிபெற செய்வேன். இதை தொடர்ந்து செய்வேன். எனது பாணியில் பயமின்றி விளையாடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இதுவரை 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 11 டி20 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதமும், டி20 போட்டிகளில் 3 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், 115 போட்டிகளில் விளையாடி 2341 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #SURYAKUMARYADAV #MICHAELBEVAN #INDVWI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suryakumar reply to journalist on comparison with Michael Bevan | Sports News.