‘இது நடக்கும்னு 3 வருசத்துக்கு முன்னாடியே இவருக்கு எப்படி தெரியும்..?’.. திடீரென வைரலாகும் ஆர்சரின் ‘பழைய’ ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களும், ரிஷப் பந்த் 30 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜோப்ரா ஆர்சர் 4 விக்கெட்டுகளும், ஆதில் ரஷித், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் ஷகர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இப்போட்டியில் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், 23 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. அப்போது அந்த ஓவரின் முதல் பந்தில் 1 ரன் மட்டும் செல்ல, அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் விளாசி ஜோப்ரா ஆர்சர் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
Kohli also could not handle the pressure nor Archers Bat #ENGvIND #INDvENG pic.twitter.com/uEdP8vjILW
— Prithvi.v.Bharadwaj (@PrithviMatka) March 18, 2021
இதற்கு அடுத்த பந்தையும் அவர் விளாச முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக பேட் உடைந்தது. இதனால் 1 ரன் மட்டும் அவரால் எடுக்க நேர்ந்தது. இதனை அடுத்து அந்த ஓவரின் 5-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஜோப்ரா ஆர்சர் அவுட்டானார்.
Any good bat repair people in the uk ?
— Jofra Archer (@JofraArcher) March 7, 2018
இந்த நிலையில், ‘இங்கிலாந்தில் சிறந்த பேட் ரிப்பேர் செய்பவர்கள் இருக்கிறார்களா?’ என்று நகைச்சுயாக ஜோப்ரா ஆர்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பதிவிட்ட பழைய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.