legend updated recent

'உங்க பொண்ணுக்கும் இதுபோல நடக்கலாம்'... சிறுவர்கள் சேர்ந்து சிறுமிக்கு செய்த அநீதி'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 10, 2019 01:11 PM

10 வயது சிறுமி டர்பன் அணிந்திருந்ததால் சிறுவர்கள் சேர்ந்து அவளை தீவிரவாதி என கூறி சிறுமியுடன் விளையாட மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sikh girl faced racism in London video goes viral

குர்பிரீத் சிங் என்பவர் தென்கிழக்கு லண்டனில் உள்ளது பிளம்ஸ்டட் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் முன்ஷிமர் கவுர். இவளின் உண்மை கதை என்று முன்ஷிமர் கவுர் பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவில் ''இன்று என் மகளுக்கு நடந்திருக்கிறது. நாளை உங்கள் மகள்களுக்கும் நடக்கலாம்’’ என தெரிவித்திருந்தார்.

முஷிமர் கவுர் பேசியுள்ள அந்த வீடியோவில் தனக்கு இழைக்கப்பட்ட இனவெறி கொடுமையை குறித்து அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவில் '' கடந்த திங்கட்கிழமை, நான்கு பேர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நானும் உங்களுடன் விளையாட வருகிறேன் என கூறினேன். அதற்கு அவர்கள் 'நீ எங்களுடன் விளையாட முடியாது. ஏனென்றால் நீ பயங்கரவாதி’ என்றனர். இதை கேட்டு நான் உடைந்து அழுதுவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டேன்.

மறுநாள் மீண்டும் அதே இடத்திற்கு சென்றேன். அப்போது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்தார். நானும் அவளுடன் விளையாட முயன்றேன். அப்போது அந்தச் சிறுமியின் அம்மா, ’நீ ஆபத்தானவளாக இருப்பதால் உன்னுடன் என் மகள் விளையாட மாட்டாள்’ என்றார். இதையடுத்து எனக்கு நடந்த இனவெறி கொடுமைகள் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன்.

டர்பன் அணிந்திருப்பது குறித்து யாருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதுபோன்று யாருக்கும் நடந்தால் பெற்றோரிடம் தெரிவியுங்கள்’’ என்று கூறியுள்ளார். சிறுமிக்கு நடந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #SIKH GIRL #RACISM #TERRORIST