ஆடுனது 6 மேட்ச், அதுல 4 மேட்ச் -ல இப்டி ஒரு மோசமான சாதனையா?.. பாகிஸ்தான் வீரருக்கு வந்த சோதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி 20 தொடர் நடந்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 14, 15 வயசுலயே பயந்து போய் HIV டெஸ்ட்.. ஷிகர் தவான் சொன்ன பரபர சம்பவம்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?
3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த சூழலில், இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளை ஆப்கானிஸ்தான் அணி வென்றதுடன் பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியையும் அவர்கள் அளித்திருந்தனர். தொடர்ந்து கடைசி டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியும் பெற்றிருந்தது.
முன்னதாக, PSL லீக் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த சூழலில், பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்தது. மேலும் PSL தொடரில் கலக்கிய இளம் வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் களமிறங்கி இருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், முதல் இரண்டு போட்டிகளிலும் முழுமையாக பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, அதனனை வெற்றியாகவும் மாற்றி சர்வதேச தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு தொடரையும் வென்றுள்ளது. இதனிடையே, இந்த தொடரில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக் கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடந்த டி 20 தொடரில் களமிறங்கி, இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகி இருந்தார். தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி சமீபத்தில் நடந்த பிஎஸ்எல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷபீக், மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் தேர்வாகி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச அணியில் அவர் இடம்பிடித்த போதும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகவும் செய்திருந்தார் அப்துல்லா. 0 (2), 0 (2), 0 (2), 0 (1) என தொடர்ச்சியாக டக் அவுட் ஆனதன் மூலம் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு முறை தொடர்ச்சியாக டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனையும் அப்துல்லா ஷபீக் வசமாகி உள்ளது.
கடந்த வாரம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், 3 போட்டிகளிலும் கோல்டன் டக்கில் அவுட்டாகி மோசமான சாதனையையும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | பெயிண்டராக மாறிய தோனி.. சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் பெயிண்ட் அடித்து லூட்டி! வைரல் வீடியோ