திருமண வாழ்க்கை.. "அதுல நான் தோத்துட்டேன், திரும்பவும் கல்யாணம் பண்ண நெனச்சா".. ஷிகர் தவான் ஷேரிங்ஸ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 28, 2023 11:42 AM

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர் ஷிகர் தவான். அது மட்டுமில்லாமல், சீனியர் வீரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஷிகர் தவான், கிரிக்கெட்டை தாண்டி வேடிக்கையான வீடியோக்கள், நடனங்கள் என சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவ் ஆகவும் இருந்து வருகிறார்.

Shikhar Dhawan opens up about his marriage life

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | பெயிண்டராக மாறிய தோனி.. சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் பெயிண்ட் அடித்து லூட்டி! வைரல் வீடியோ

மேலும், ஃபீல்டிங் செய்யும் போது கேட்ச் எடுத்தால் உடனே தொடையில் தட்டி அதனை வித்தியாசமாக கொண்டாடுவது என ஷிகர் தவானின் பல விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவை ஆகும்.

அதே போல, வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ள 16 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடும் ஷிகர் தவான், இந்த முறை கேப்டனாகவும் செயல்பட உள்ளார். இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பஞ்சாப் அணி, ஷிகர் தவான் தலைமையில் கோப்பையைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம்திறந்து பேசி உள்ளார் ஷிகர் தவான். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்திருந்தார் ஷிகர் தவான். தொடர்ந்து சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதாக தகவல்கள் பரவி வந்தது. இதனையடுத்து தனது திருமண வாழ்க்கை குறித்து தற்போது பேசி உள்ளார் ஷிகர் தவான்.

Shikhar Dhawan opens up about his marriage life

Images are subject to © copyright to their respective owners.

"இந்த விஷயத்தில் நான் தோல்வியை தழுவி விட்டேன். இறுதி முடிவு எடுப்பது என்பது அந்தந்த மனிதர்களின் கையில் தான் உள்ளது. நான் திருமண உறவில் தோற்று விட்டேன். இதற்காக பிறரை குறைகூற விரும்பவில்லை. ஏனென்றால் இது என்னுடைய முடிவு.

அந்த ஃபீல்டு குறித்து நான் அறியாததால் நான் தோல்வி அடைந்தேன். இன்று நான் கிரிக்கெட் குறித்து பேசும் விஷயங்களை 20 ஆண்டுகளுக்கு முன் அறிந்திருக்க மாட்டேன். இது அனுபவத்தால் வருவது. இப்போது என்னுடைய விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாளை நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதில் மிகவும் புத்திசாலியாக இருப்பேன்.

Shikhar Dhawan opens up about his marriage life

Images are subject to © copyright to their respective owners.

எனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதை நான் அறிவேன். எனக்கு 26 - 27 வயது இருந்தபோது, நான் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தேன். எந்த உறவிலும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

அதே போல, இளைஞர்களுக்கு திருமணம் மற்றும் காதல் அனுபவம் குறித்து சில விஷயங்களையும் ஷிகர் தவான் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆடுனது 6 மேட்ச், அதுல 4 மேட்ச் -ல இப்டி ஒரு மோசமான சாதனையா?.. பாகிஸ்தான் வீரருக்கு வந்த சோதனை!!

Tags : #CRICKET #SHIKHAR DHAWAN #MARRIAGE LIFE #SHIKHAR DHAWAN ABOUT HIS MARRIAGE LIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shikhar Dhawan opens up about his marriage life | Sports News.