சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த டிராவிட்.. வீடியோவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போன 'CSK'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்கள் சமீபத்தில் முடிவடைந்தது.

Also Read | "ஒரு தடயமும் இல்லையே.." திருடனை பிடிக்க வழி தேடிய போலீஸ்.. "கடைசியா கொசு கொடுத்த 'Clue'
இதில், இரு அணிகளுக்கு இடையே நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி 20 தொடரை 2 - 1 என்ற கணக்கிலும், அதன் பின்னர் நடந்த ஒரு நாள் தொடரை 2 - 1 என்ற கணக்கிலும், இந்திய அணி கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது.
இங்கிலாந்து மண்ணில் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி மோத உள்ளது.
இதில், முதலாவதாக ஒரு நாள் தொடர், நாளை மறுநாள் (ஜூலை 22) ஆரம்பமாகிறது. மேலும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
இதன் பின்னர் நடைபெற உள்ள டி 20 தொடரில், இந்திய அணியை மீண்டும் ரோகித் சர்மா தலைமை தாங்க உள்ளார். இதிலும், கோலி மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது.
இந்நிலையில், ஷிகர் தவான் தற்போது வெளியீட்டுள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த காரியம் தான், தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் 'Hey' என கூறிய படி, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் கடந்து செல்ல, கடைசியில் ராகுல் டிராவிட்டும் வருகிறார்.
ராகுல் டிராவிட் என்றாலே சற்று அமைதியானவர் என ஒரு கூற்று தான் உள்ளது. ஆனால், இந்த வீடியோவில் மிகவும் கூலாக, அதே வேளையில் ஜாலியாகவும் அவர் வந்து சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட, அவர் டென்ஷன் ஆவது போல் நடித்திருந்த ஒரு விளம்பரமும் பெரிய அளவில் வைரலாகி இருந்தார். அதே போல, இந்த வீடியோவும் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில், இதே வீடியோவை ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் பாடல் மற்றும் Effect போட்டு, ராகுல் டிராவிட்டை தனியாக ஹைலைட் செய்தும் வெளியிட்டுள்ளார்கள்.
Manikam Dravid's Baasha transformation 🔥#IdhuEpdiIruku #WhistlePodu 🦁💛
🎥 : @SDhawan25 pic.twitter.com/MRDkUUkkY9
— Chennai Super Kings (@ChennaiIPL) July 19, 2022
Also Read | "இனி அடிக்கடி சட்டை இல்லாம சுத்தணும்.." கடற்கரையில் 'Enjoy' பண்ணும் எலான் மஸ்க்.!.. வாழ்றாருயா மனுசன்

மற்ற செய்திகள்
