IND VS WI : சத்தமே இல்லாம சூர்யகுமார் செய்த சம்பவம்.. கிரிக்கெட் 'HISTORY'லயே இதான் ஃபர்ஸ்ட்.. 'ஸ்பெஷல்' சாதனை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், சூர்யகுமார் யாதவ் சிறப்பான சாதனை ஒன்றை செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் ஆடி வருகிறது.
ஒரு நாள் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெற்று, தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.
தடுமாறிய இந்திய அணி
தொடர்ந்து, இன்று ஆரம்பமான இரண்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணி, மிகவும் நிதானமாகவே ரன்கள் எடுத்தது. இன்னொரு பக்கம், வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் சிறப்பான பந்து வீச்சால், விக்கெட்டுகளை இழந்தும் தடுமாற ஆரம்பித்தது.
சூர்யகுமார் - ராகுல்
ராகுல் மற்றும் சூர்யகுமார் ஆகியோர், ஓரளவுக்கு சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்த போதும், இந்திய அணியால் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் 64 ரன்களும், ராகுல் 49 ரன்களும் எடுத்திருந்தனர்.
அசத்தல் சாதனை
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது. இதனிடையே, சூர்யகுமார் சிறப்பான சம்பவம் ஒன்றை இந்த போட்டியில் செய்து காட்டி அசத்தியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு, இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் சூர்யகுமார். தன்னுடைய முதல் போட்டியில், 31 ரன்கள் எடுத்திருந்தார்.
வேற லெவல் பெருமை
தொடர்ந்து, இதுவரை மொத்தம் 6 ஒரு நாள் போட்டியில் ஆடியுள்ள சூர்யகுமார், 31*, 53, 40, 39, 34* மற்றும் 64 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், தன்னுடைய முதல் ஆறு ஒரு நாள் போட்டியிலும் 30 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, ரியான் டென் டொஸ்கேத், டாம் கூப்பர் மற்றும் பகர் சமான் ஆகியோர்,தங்களுடைய முதல் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே, தொடர்ந்து 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்து, சாதனையாக இருந்தது.
நீண்ட இடைவெளி
ஆனால், அதனை சூர்யகுமார் இன்று முறியடித்து அசத்திக் காட்டியுள்ளார். பல வருடங்கள் இந்திய அணியில் இடம் கிடைக்காமல், அவதிப்பட்டு வந்த சூர்யகுமாருக்கு கடந்த ஆண்டு தான், அணியில் இடம் கிடைத்திருந்தது.
அப்படி ஒரு நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, சர்வதேச அணியில் சூர்யகுமாருக்கு இடம் கிடைத்ததையடுத்து, தன்னுடைய வாய்ப்பினை சிறப்பான முறையில் கையாண்டு வருவதால், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
