"அடுத்த 'மேட்ச்'ல அவரு ஆடுவாரு..." வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... 'வெறி' மோடில் 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனி மீதமுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக ஆடி வரும் நிலையில், அதன் பிறகுள்ள பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர்.
தனது அடுத்த போட்டியில், பெங்களூர் அணியை பஞ்சாப் எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த போட்டியில் கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வயிற்றுவலி காரணமாக கெயில் அவதிப்பட்டு வந்த காரணத்தினால் அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் வயிற்று வலியில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், நேற்று பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் போட்டியில் ஆடுவதற்கு சிறந்த உடல் தகுதியுடன் இருப்பதாக பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் சிக்ஸர்கள், சதம் என பட்டையை கிளப்பும் கெயில், இனிவரும் போட்டிகளில் களமிறங்கும் பட்சத்தில், பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வரும் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்றே கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
