இவ்வளவு நாளா 'இந்தியா டீம்' வலைபோட்டு தேடிட்டு இருந்த 'ஆல்-ரவுண்டர்' நமக்கு கெடச்சாச்சு...! - 'எந்த' ஐபிஎல் டீம்ல உள்ளவர சொல்றாருன்னு தெரியுதா...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தேடிய ஆல் ரவுண்டரை அடையாளம் கண்டுவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக புதிதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் வீரர்கள், அவர்களின் ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் இருந்தே கண்டறியப்படுகின்றனர். அதுபோல 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு ஆல் ரவுண்டரை அடையாளம் காட்டியுள்ளது.
அவர்தான் ஐபிஎல் கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். இதுகுறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், 'இன்டர்நேஷனல் தொடர்களில் இந்திய அணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை கொல்கத்தா அணி அடையாளம் காட்டியுள்ளது.
வெங்கடேஷ் ஐயர் தனது பவுலிங் திறன்கள் பெரிய அளவில் வெளிக்காட்டவில்லை என்றாலும் அவர் போடும் யார்கரை பேட்ஸ்மேன்கள் விளையாட தடுமாறுகின்றனர். அதோடு, அவர் மிக சிறந்த பேட்ஸ்மேனும் தான்' எனக் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் 193 ரன்களை எடுத்துள்ளார்.
அதில், இரண்டு அரை சதங்கள். 25 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். பவுலராக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தற்போது இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பெரிய அளவில் பந்து வீச தவறி வரும் நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கு பல கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.