'இந்த ஐபிஎல்ல அவன் தான் ஸ்டார்'... 'பையன் யுவராஜ் சிங் போல ஆடுறான்'... இளம் வீரர் மீது திரும்பியுள்ள மொத்த கவனம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅவரது ஆட்ட நுணுக்கங்களில் யுவராஜ் சிங் வெளிப்படுகிறார் என பார்திவ் படேல் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதால் வீரர்கள் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி பலரது புருவங்களை உயர்த்தியுள்ளார். நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 53 ரன்களையும். முன்னதாக பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 41 ரன்களையும் சேர்த்தார் இந்த இளம் வீரர். இதனையடுத்து அனைவரது கவனத்தையும் வெங்கடேஷ் ஈர்த்துள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள பார்தில் படேல், ''வெங்கடேஷ் இதுவரை எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய ஏ அணிக்காகக் கூட விளையாடாதவர். ஆனால் அவரின் விளையாட்டு திறன் மிகவும் பிரமிப்பாக உள்ளது. குறிப்பாக அவருக்குச் சிறிதும் பயம் இல்லை. இந்த ஐபிஎல்லில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர் வெங்கடேஷ் தான்.
மேலும் ''வெங்கடேஷின் சிறப்பம்சம் என்னவென்றால் அவரால் பேட்டிங் வரிசையில் 1 முதல் 9 இடத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட முடியும். அவரால் பந்துவீசவும் முடியும். அவருக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவரது ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் பிரதிபலிப்பு இருப்பதை நான் பார்க்கிறேன்'' என பார்தில் படேல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
