VIDEO: நைட் 1 மணிக்கு எழுந்திருச்சு மனுசன் என்ன பண்ணாரு பாருங்க.. ஸ்மித் மனைவி வெளியிட்ட வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்டீவன் ஸ்மித் செய்த செயல் குறித்து அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹப்பா மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இதில் இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்று வருகிறது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் பேட் கம்மின்ஸ், கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதனால் அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
Steve Smith’s wife catches him shadow batting at 1am in their hotel room.
📸 Instagram/dani_willis #Ashes pic.twitter.com/5COJlUWiJt
— Nic Savage (@nic_savage1) December 18, 2021
இந்த நிலையில் ஸ்மித்தின் மனைவி டேனி வில்லிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இரவு சுமார் 1 மணி அளவில் ஸ்மித் தனது பேட்டை சரி செய்து பார்க்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்
