‘3 வருசம் ஆச்சு இப்படி பார்த்து’.. கொரோனாவால் ஸ்மித்துக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹப்பா மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று (16.12.2021) நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஸ்டீபன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த டீம் பெய்ன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனால் அவர் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் ஸ்டீவன் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொரானா தொற்று ஏற்பட்ட நபருடன் பேட் கம்மின்ஸ் தொடர்பில் இருந்ததால், 2-வது டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அதனால் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பால் டெம்பரிங்கில் சிக்கிய ஸ்டீவன் ஸ்மித்திக்கு, ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஸ்மித் கேப்டன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.