'வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல்...' 'கோலியை பின்னுக்கு தள்ளி நம்பர் 2 ஆன ஆஸி வீரர்...' 'நம்பர் 1-ல எந்த சேஞ்சும் இல்ல...' - அவரே தான்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 238 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். 919 புள்ளிகளுடன் அதிகப் புள்ளிகளை எடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 131, 81 ரன்கள் எடுத்த ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார்.
அதேசமயம், சிட்னி டெஸ்ட்டில் இரு அரை சதங்கள் அடித்த புஜாரா, 2 இடங்கள் முன்னேறி 753 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
6-வது இடத்தில் இருந்த கேப்டன் ரஹானே சிட்னி டெஸ்ட்டில் சரியாக விளையாடாததை அடுத்து, இரு இடங்கள் குறைந்து, 756 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.ரிஷப் பந்த் 19 இடங்கள் முன்னேறி 26ம் இடம் பிடித்துள்ளார்.
ஹனுமா விஹாரி 52-வது இடத்திலும், அஸ்வின் 89-வது இடத்திலும், ஷுப்மான் கில் 69-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் அஸ்வின் 2- இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்குச் சென்றுள்ளார். பும்ரா 9-வது இடத்திலிருந்து சரிந்து 10-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 428 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளரில் அஸ்வின் 9-வது இடமும் பும்ரா 10-வது இடமும் பெற்றுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
