‘அதிரடி காட்டிய நேரத்தில்’... ‘திடீரென பாதிப் போட்டியில் வெளியேறிய இந்திய வீரர்’... ‘இந்திய அணிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தசைப் பிடிப்பு, காயத்தால் வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி, தற்காலிக கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்கி ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே ஜோ பர்ன்ஸ் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் பந்துவீச்சில் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், முதல் இன்னிங்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் இரண்டாம் இன்னிங்சில் அதிரடி காட்டி ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி திருப்பம் அளித்தார்.
இரண்டாம் இன்னிங்சில் துவக்கம் முதல் தொடர்ந்து பந்து வீசி வந்த நிலையில், 8-வது ஓவரில் அவர் 4-வது பந்தை வீசும்போது தடுமாறினார். ஓடி வரும் போது, முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் அமர்ந்தார். காலில் ஏற்பட்ட வலியால் உமேஷ் யாதவ் துடித்தார். இதையடுத்து பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார். எனினும் அவரால் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் மீதமிருந்த 3 பந்துகளையும், முகமது சிராஜ் வீசினார். எனினும், உமேஷ் யாதவ்வால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர் வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி இதனால் சிக்கலில் உள்ளது. ஏற்கெனவே இந்திய அணி காயத்தால் இசாந்த் சர்மாவை இழந்துவிட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ள நிலையில் உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்திய அணியில் வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மட்டுமே பந்துவீசி வருகின்றனர். அஸ்வின், ஜடேஜா இருப்பதால் அதிக ஓவர்களை அவர்களுக்கு அளித்து கேப்டன் ரஹானே சமாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
This doesn't look good for Umesh Yadav. He's pulled up gingerly and is hobbling off the field #AUSvIND pic.twitter.com/ncOESNol2m
— 7Cricket (@7Cricket) December 28, 2020

மற்ற செய்திகள்
