‘இனி நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’.. ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’-ன் அசத்தல் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 02, 2020 06:39 PM

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது.

Star Sports Tamil on now Instagram

கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், தமிழ் ரசிகர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என புதிய சேனலை தொடங்கியது. இதில் விளையாட்டு போட்டிகளின் கமெண்ட்ரிகள் அனைத்தையும் மக்கள் தமிழ் மொழியிலேயே கண்டுகளித்து வருகின்றனர். பல்வேறு சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களின் கலந்துரையாரல், ரகளை வித் ரமேஷ், ஒரு கதை சொல்லட்டா சார் வித் ஹேமந்த் பத்தானி, ஸ்டார்-ஐ கேளுங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புரோமா வீடியோக்களையும் பார்க்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : #CRICKET #INSTAGRAM #STARSPORTSTAMIL