28 பந்துல 80 ரன்.. வளைக்க 'போட்டிபோடும்' பிரபல அணிகள்.. ஆனா அவருக்கு 'அந்த டீம்' மேலதான் கண்ணாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 25, 2019 08:27 PM

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் இங்கிலாந்து இளம்புயல் டாம் பேண்டன் ஈர்க்க போவது உறுதியாகி உள்ளது. அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் டாம் பேண்டன் 28 பந்துகளில் 80 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

Tom Banton wants to play for Mumbai Indians in IPL 2020

2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் டாம் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. ஐபிஎல் அணிகளில் மிகவும் வலிமையான அணிகளான சென்னை, மும்பை இரண்டு அணிகளும் டாமை ஏலத்தில் எடுக்க ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஐபிஎல் அணிகளில் எந்த டீமுக்காக ஆட ஆசை என கேட்கப்பட்டது.

பதிலுக்கு அவர் நான் மும்பை இந்தியன் அணியின் ரசிகன், அதனால் அந்த அணிக்காக ஆட ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து நாட்டின் அண்டர் 19 அணிக்காக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆடியதாகவும் அப்போது 5-0 கணக்கில் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உள்ளூர் மக்கள் கொடுத்த ஆதரவை தன்னால் மறக்க முடியாது என்றும் டாம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் பதிலாக சென்னை அணி டாமை ஏலத்தில் எடுக்க ஆசைப்படுகிறது. அதே நேரம் ஈவின் லீவிஸை விடுவித்ததால் மும்பை அணியும் டாமை குறிவைத்துள்ளது. இதனால் 2 அணிகளில் டாமை ஏலத்தில் எடுக்க போவது எந்த அணி? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.