VIDEO: 'அவர் களத்துக்குள்ள வந்ததும்... உஷாரான இந்திய அணி'!.. CODE WORDல் பேசிக் கொண்ட கோலி - சிராஜ்!.. இவ்ளோ பயங்கரமான ஸ்கெட்ச்சா!?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் கோலியும், சிராஜும் சைகை மொழியில் பேசிக் கொண்ட வீடியோவின் பின்னணியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணி வீரர்களை சீண்டுவதும், இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணி வீரர்களை சீண்டுவதும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியது.
அந்த வகையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரும் வேளையில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் அவரை நோக்கி எச்சரிக்கும் விதத்தில் சில குறியீடுகளை செய்தது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது, ஆண்டர்சன் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து கொண்டிருக்கையில் கேப்டன் கோலி சிராஜை நோக்கி அவர் பேட்டிங் செய்யும்போது பந்தை தலை உயரத்திற்கு தொடர்ந்து பவுன்சர் வீசும்படி சைகை செய்தார். அதனை கவனித்த சிராஜ் தலைப்பகுதியில் தட்டி நிச்சயம் அதே போன்று பவுன்சர்கள் தான் நான் வீசப் போகிறேன் என்பது போல கோலியிடம் சைகை காண்பித்தார்.
ஆண்டர்சன் களம் இறங்கி வரும் போதே அவரை எச்சரிக்கும் வகையில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் செய்த இந்த செயலானது ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக விளையாடிய சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Siraj and Kohli 🤪 pic.twitter.com/BmRUcw95aV
— Simran (@CowCorner9) August 20, 2021