“என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்..!”- நண்பன் செய்த உதவியை நினைத்து உருகும் ஷ்ரேயாஸ் ஐயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தி உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள், பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மூத்த வீரர் கவாஸ்கர் கைகளால் டெஸ்ட் அணிக்கான அறிமுக தொப்பியை வாங்கிய ஷ்ரேயாஸ் முதல் நாளிலேயே தனது ஆட்டத்தால் பலரையும் கவர்ந்துள்ளார் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பாராட்டி உள்ளார். மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்து இருந்தாலும் 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் வந்துவிட்டால் ஷ்ரேயாஸ்-க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியே தற்போது நிலைத்து நிற்கிறது.
இந்த சூழலில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு துணையாக இருந்த நண்பனுக்கு நன்றி தெரிவிப்பதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரின் மூலம் அறிமுகம் ஆன நினைவலைகளை ஷ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்துள்ளார். ஷ்ரேயாஸ் கூறுகையில், “கான்பூர் ஸ்டேடியம் எனக்குப் பெரிய லக் என்றே சொல்லலாம். நான் ரஞ்சி கோப்பையில் அறிமுகம் ஆனதே சூர்யகுமார் கேப்டன் ஆக இருந்த அணியில்தான்.
என்னுடைய முதல் போட்டியை எனக்கு உற்சாகம் அளித்து தொடங்கி கொடுத்து சூர்யகுமார் யாதவ்-க்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அணியில் இருந்து விலக்கப்படுவேன் என்ற சூழல் ஏற்பட்ட போது எனக்கு வாய்ப்பு அளித்தது சூர்யகுமார். அதன் பின்னர் அதே போன்ற ஒரு சூழலில் நாங்கள் கான்பூர் டெஸ்ட் போட்டியில் சந்தித்தோம். இந்த டெஸ்ட் போட்டியிலும் சரி கடந்த ஐபிஎல் போட்டிகளின் போதும் சரி எனக்கு நான் விளையாடிய மைதானம் பெரிய அதிர்ஷடம் ஆகவே அமைந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்- சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் நட்பு குறித்தும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் ஊக்கப்படுத்திக் கொண்டதையும் பாராட்டும் வகையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நண்பர்கள் பங்கேற்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.