மைதானத்தில் கடுமையான வாக்குவாதம்… அம்பயர் மீதான கோபத்தில் கண்ணாடியை வீசி எறிந்த சாஹர்..!- வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய A அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு A அணி உடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய சீனியர்கள் கிரிக்கெட் அணியினர் விரைவில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அதற்கு முன்னதாக தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் A அணியினர்கள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். 3 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு போட்டியும் 4 நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டி நவம்பர் 23 முதல் 26-ம் தேதி வரையில், 2-ம் போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரையில், 3-வது போட்டி டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுமே தென் ஆப்பிரிக்காவில் உள்ள புளோயெம்ஃபொன்டின் நகரில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இளம் வீரர் ராகுல் சாஹர் அம்பயர் உடன் நடத்திய வாக்குவாதம் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேற்றைய ஆட்டத்தின் போது 128-வது ஓவரில் ராகுல் சாஹர் அம்பயரிடம் LBW கேட்க அதை அம்பயர் மறுத்து இருக்கிறார். தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக இருந்த ராகுல் சாஹர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பந்து ஸ்ட்மப்-ஐ விட்டு மேலே தாண்டித்தான் செல்கிறது. ஆனால், அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாஹர் ஒருகட்டத்தில் தனது கூலர்ஸ் கண்ணாடியை வீசி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். மைதானத்தில் ராகுல் சாஹர் இதுபோல் நடந்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Rahul Chahar might get pulled up here, showing absolute dissent to the umpires call.
A double appeal and throwing his equipment. #SAAvINDA
Footage credit - @SuperSportTV pic.twitter.com/TpXFqjB94y
— Fantasy Cricket Pro (@FantasycricPro) November 24, 2021

மற்ற செய்திகள்
