ஒவ்வொரு 'BALL'-லயும் சும்மா 'சரவெடி'யா வெடிச்ச மொட்ட 'பாஸ்'..." 'ஐபிஎல்' வரலாற்றிலேயே செய்த மகத்தான 'சாதனை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தற்போது மோதி வரும் நிலையில், டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், மிக அதிரடியாக ஆடி சதமடித்துள்ளார். இவர் கடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் சதமடித்திருந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை தவான் படைத்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் கண்ட தவான், கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டார். இந்நிலையில், இன்றுடன் சேர்த்து கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதத்திற்கும் அதிகமாக அடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தொடர்ச்சியாக சதமடித்தும் அசத்தியுள்ளார். முன்னதாக, ஐபிஎல் போட்டிகளில் சேர்த்து ஷிகர் தவான் 5,000 ரன்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
