"அப்பாடா,.. ஒரு வழியா அவருக்கு 'டீம்'ல 'சான்ஸ்' கெடச்சுருச்சு..." மகிழ்ச்சியில் 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லி அணியில் ரஹானே இடம்பெற்றுள்ளார். இதுவரை டெல்லி அணி 6 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், ஐந்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதில் ஒரு முறை கூட ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், இன்றைய போட்டியில் தான் இடம் கிடைத்துள்ளது. முன்னதாக டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் சிறப்பாக ஆட போதும் அவருக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான சாதனைகளை செய்துள்ள ரஹானேவை ஏன் இன்னும் களமிறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று ரஹானே அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரஹானே அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
