14, 15 வயசுலயே பயந்து போய் HIV டெஸ்ட்.. ஷிகர் தவான் சொன்ன பரபர சம்பவம்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 27, 2023 10:55 PM

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர் ஷிகர் தவான். அது மட்டுமில்லாமல், சீனியர் வீரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஷிகர் தவான், கிரிக்கெட்டை தாண்டி வேடிக்கையான வீடியோக்கள், நடனங்கள் என சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவ் ஆகவும் இருந்து வருகிறார்.

Shikhar Dhawan about HIV test in young age by tattoo

                                                          Images are subject to © copyright to their respective owners

அது மட்டுமில்லாமல், ஃபீல்டிங் செய்யும் போது கேட்ச் எடுத்தால் உடனே தொடையில் தட்டி அதனை வித்தியாசமாக கொண்டாடுவது என ஷிகர் தவானின் பல விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவை ஆகும்.

அதே போல, வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ள 16 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடும் ஷிகர் தவான், இந்த முறை கேப்டனாகவும் செயல்பட உள்ளார். இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பஞ்சாப் அணி, ஷிகர் தவான் தலைமையில் கோப்பையைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, தனது சிறு வயதில் நடந்த சம்பவம் குறித்து தற்போது ஷிகர் தவான் தெரிவித்துள்ள கருத்து ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. பொதுவாக ஷிகர் தவான் உடலில் நிறைய இடங்களில் டாட்டூ நிறைந்து இருப்பதை நம்மால் காண முடியும். அப்படி இருக்கையில், சிறு வயதிலேயே டாட்டூ போடும் ஆர்வம் தவானுக்கு இருந்துள்ளது.

இது பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷிகர் தவான், "எனக்கு ஒரு 14, 15 வயது இருக்கும். டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் மணாலி சென்று குடும்பத்தினருக்கு தெரியாமல் டாட்டூ போட்டுக் கொண்டேன். ஒரு சில மாதங்கள் அதனை மறைத்து வைக்கவே பின்னர் என் அப்பா அதனை கண்டுபிடித்து தண்டித்து விட்டார்.

Shikhar Dhawan about HIV test in young age by tattoo

Images are subject to © copyright to their respective owners

இதன் பின்னர் டாட்டூ குத்தும் போது ஊசி வழியாக மை உடலுக்குள் சென்றுவிடும் என்றும் அதன் பெயரில் HIV உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பதை எல்லாம் கேள்விப்பட்டு நான் பயந்து போய் விட்டேன். அதனால் நான் ஹெச்ஐவி டெஸ்ட் எடுக்க முடிவு செய்ததுடன் போய் பரிசோதனையும் செய்தேன். அதில் எனக்கு நெகடிவ் என்றும் முடிவு வந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

Tags : #SHIKHAR DHAWAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shikhar Dhawan about HIV test in young age by tattoo | Sports News.