IPL 2022 : ரிஷி தவான் போட்டிருந்த 'MASK'.. "என்னங்க இது புதுசா இருக்கே?.." குழம்பிய ரசிகர்கள்.. "அட, இதுதான் விஷயமாம்.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, இதுவரை 7 லீக் போட்டிகள் ஆடி முடித்துள்ள சிஎஸ்கே, அதில் இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
இனி வரும் போட்டிகளில், தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து சிஎஸ்கே அணியால் நீடிக்க முடியும்.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களை எடுத்து அசத்தி இருந்தார். ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை எடுத்துள்ள ஷிகர் தவான், சென்னை அணிக்கு எதிராகவும் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களுக்கு மேல் அடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார்.
6 வருடங்களுக்கு பிறகு..
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய வீரர் ஒருவரை பற்றி ரசிகர்கள் பலரும் கருத்தினை தெரிவித்து வந்தனர். பிரபல வீரரான ரிஷி தவான், கடைசியாக 2016 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி இருந்தார். ரஞ்சி தொடர் மற்றும் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து ஆடி வந்தார் ரிஷி. இதில், 2021 - 22 விஜய் ஹசாரே கோப்பையை, ரிஷி தவான் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அணி கைப்பற்றி இருந்தது.
ரிஷி அணிந்திருந்த 'Face Guard'
இந்த தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ரிஷி தவான் பட்டையைக் கிளப்பி இருந்தார். ரிஷி தவானை பஞ்சாப் அணி, இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 55 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தது. இதுவரை எந்த போட்டிகளிலும் அவர் களமிறங்காத நிலையில், இன்று சென்னை அணிக்காக பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ளார். பேட்டிங் செய்ய ரிஷி தவானுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர் தற்போது பந்து வீசி வருகிறார். சிஎஸ்கே வீரர் ஷிவம் துபேவின் விக்கெட்டையும் எடுத்திருந்தார்.
இதனிடையே, அவர் அணிந்திருந்த 'Face Guard' பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் அதிகம் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இது பற்றி ரசிகர்கள் அதிகம் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து, ரிஷி தவான் அணிந்திருந்த அந்த 'Face Guard'க்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
இது தாங்க விஷயம்..
சமீபத்தில் பயிற்சியின் போது ஈடுபட்டிருந்த ரிஷி தவானின் மூக்கு பகுதியில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக வேண்டி, Minor Surgery ஒன்றையும் ரிஷி மேற்கொண்டுள்ளார். தற்போது நல்ல நிலையில் இருந்தாலும், வேறு ஏதேனும் காயம் அதில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் ரிஷி தவான் அதனை அணிந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8