‘எங்களை தாண்டி கப்பை தொடுங்க பார்ப்போம்’!.. இந்தியாவுக்கு நேரடியாக ‘சவால்’ விட்ட ஸ்காட்லாந்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்கு சவால் விட்ட ஸ்காட்லாந்து அணியின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2-ல் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் நியூஸிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஆனால் இந்தியா இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், இனி விளையாடி இருக்கும் 2 போட்டிகளிலும் நிச்சயம் அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் 37-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், ஸ்காட்லாந்தும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்காட்லாந்து அணி பதிவிட்ட ட்வீட், தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘இந்தியா, நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், எங்களை தாண்டிதான் போக வேண்டும்’ என இந்தியாவுக்கு சவால் விடும் தொணியில் ஸ்காட்லாந்து அணி ட்வீட் செய்திருந்தது.
“India, If you want this trophy, you’re going to have to go through us” pic.twitter.com/1gqUTaLypC
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021
ஆனால் ஸ்காட்லாந்து அணியை 100 ரன்களுள் சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. அதனால் தற்போது ஸ்காட்லாந்து அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
That's the spirit!! Unlikely India will go ahead to the semis but some good tight games should be fun.
— Chirag Wakaskar (@chiragwakaskar) November 5, 2021
Admin while writing this post pic.twitter.com/rkoBWwKfGX
— nerdy Ur Rehman🇦🇫 (@nerdy279) November 5, 2021
Now you were going to your home.India win the match by 8 wickets. pic.twitter.com/ydYjkRQpaX
— Abdullah (@Abdullah226634) November 5, 2021