"இன்னும் ஐபிஎல் 'மோட்'ல தான் இருக்காரு போல.." பட்டாசாக வெடித்த சூர்யகுமார் யாதவ்!!... "இவரையா 'டீம்'ல எடுக்காம விட்டீங்க??.." வேதனைப்பட்ட ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் சூர்யகுமார் யாதவ், மும்பை அணிக்காக பல போட்டிகளில் தனியாக முத்திரை பதித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது ஐபிஎல் தொடரில் இருந்த சில வீரர்களுக்கு சர்வதேச அணியில் இடம் கிடைத்திருந்த நிலையில், மும்பை அணிக்காக முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் இடம்பெறாமல் போனது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக கிரிக்கெட் ரசிகர்களும், பல கிரிக்கெட் வீரர்களும் குரல் கொடுத்தனர். அதே போல, கோலி மற்றும் சூர்யகுமார் இடையே பிரச்சனை என்பது போன்றும் பல யூகங்கள் கிளம்பியது. இந்நிலையில், சையது முஸ்தாக் அலி டிராபி விரைவில் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக, மும்பை அணி தயாராகி வரும் நிலையில் அந்த அணிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
டீம் 'பி' அணிக்கு சூர்யகுமார் யாதவும், டீம் 'டி' அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வலும் தலைமை தாங்கினர். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ரன்கள் அடித்து அசத்தினார். மொத்தம் 10 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களையும் சூர்யகுமார் பறக்கவிட்டார். இதில், டீம் 'டி' அணியில் இடம்பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஒரே ஓவரில் 21 ரன்களை சூர்யகுமார் அடித்து நொறுக்கினர்.
அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 4 ஓவர்களில் மற்ற 3 ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் எதுவும் செல்லாத நிலையில், அந்த ஒரு ஓவரை மட்டும் சூர்யகுமார் யாதவ் சிதறவிட்டார். தொடர்ந்து, மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் எப்போது சர்வதேச அணியில் இடம்பெறுவர் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
