RRR Others USA

"வேற எந்த டீம்'லயும் இப்டி நடக்காது.." 'CSK' அணிக்கு மட்டுமே உள்ள ஸ்பெஷல்.. சீக்ரெட் உடைத்த ஹர்பஜன் சிங்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 01, 2022 06:41 PM

ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணியை கடந்த சீசன் வரை வழிநடத்தி வந்த தோனி, தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருந்த போது, கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

harbhajan singh about why csk is different from other teams

தோனியின் திடீர் அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரை, கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தோனிக்கு பதிலாக, சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.

சிஎஸ்கேவின் பிளான் என்ன?

ஜடேஜாவின் தலைமையில், இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே (கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக), இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும், சென்னை அணி தோல்வி அடைவது இது தான் முதல் முறை. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, அணியிலுள்ள தவறுகளை சரி செய்து கொண்டு, அதனை வெற்றியாக, இனிவரும் போட்டிகளில் மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே பற்றிய 'சீக்ரெட்'

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியிலுள்ள சீக்ரெட் பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன். கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த ஹர்பஜன் சிங், கடைசியாக கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி இருந்தார்.

அதற்கு முன்பாக, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட அணிகளிலும் ஹர்பஜன் சிங் ஆடி வந்துள்ளார். அப்போது, தான் சென்னை அணிக்காக முதல் முறை ஆடிய போது, மற்ற அணிகளிடம் இருந்து வேறுபட்டு சிஎஸ்கே அணி திகழ்ந்த விஷயத்தை பற்றி, ஹர்பஜன் சிங் தற்போது பேசியுள்ளார்.

சிஎஸ்கே தான் பாத்துப்பாங்க..

"சிஎஸ்கே அணியில் இணைந்த போது, அங்கிருந்த புதிய கலாச்சாரம் ஒன்றை நான் கவனித்தேன். அணியிலுள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கான டிக்கெட் மற்றும் கட்டண செலவு, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சிஎஸ்கே நிர்வாகம் தான் பார்த்துக் கொள்ளும். ஒரு வீரரின் குடும்பத்தில் இருந்து, மொத்தம் 10 பேர் வந்தாலும், அவர்களின் செலவினை ஏற்றுக் கொள்ளவும் சென்னை அணியினர் தயாராக தான் இருந்தார்கள்.

வேற டீம்'ல அப்டி இல்ல..

மற்ற எந்த அணிகளும் அப்படி செய்வதில்லை. வேறு அணியில், உங்களின் மனைவி கூட இருந்தாலே, அவர்களின் செலவையும் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தங்குவதற்கு அதிக அறை வேண்டுமென்றால், உங்கள் சம்பளத்தில் இருந்து அந்த கட்டணம் கழித்து கொள்ளப்படும். ஆனால், சிஎஸ்கே அணியில் அப்படி கிடையாது.

பிக்னிக் மாதிரி இருக்கும்..

நான் அந்த அணிக்காக ஆடிய போது, மொத்தம் 7 முதல் 8 குடும்பத்தினர் எங்களுடன் இருப்பார்கள். நிறைய குழந்தைகளும் அங்கு இருப்பார்கள். இதனால், ஐபிஎல் போட்டிகள் ஆடும் உணர்வே இருக்காது. ஏதோ பிக்னிக் சென்றது போல தோன்றும். அது முற்றிலும் மாறுபட்ட சூழல். மற்ற அணிகளில் இது போன்ற சூழல் இருந்தாலும், சிஎஸ்கே அளவிற்கு அவை அமைவதில்லை.

இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களைக் கூட, அணி வீரர்களின் குடும்பத்தினருக்காக செய்து வரும் சிஎஸ்கேவிற்கு வாழ்த்துக்கள்" என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #HARBHAJAN SINGH #CSK #IPL 2022 #FAMILY #சிஎஸ்கே #ஹர்பஜன் சிங்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Harbhajan singh about why csk is different from other teams | Sports News.