"எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." CSK'வுக்கு எதிரான போட்டியில்.. கவுதம் கம்பீர் செய்த காரியம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், நேற்று (31.03.2022) மோதிய ஐபிஎல் போட்டி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் அடித்திருந்தது.
அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்களும் தங்களின் பங்குக்கு அதிரடி காட்ட, நல்ல ஸ்கோரை சிஎஸ்கே எட்டி இருந்தது.
சரவெடியாய் வெடித்த லக்னோ
தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது. இதனால், தேவையான ரன்கள் ஓவரில் வந்து கொண்டே இருக்க, கடைசி இரண்டு ஓவர்களில், அந்த அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரை ஷிவம் துபே வீச, இளம் வீரர் படோனி மற்றும் லீவிஸ் ஆகியோர் இணைந்து 25 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.
சொதப்பிய சி எஸ்கே
மூன்று பந்துகள் மீதம் வைத்து, இலக்கினை லக்னோ அணி எட்டிப்பிடிக்க, 15 ஆவது ஐபிஎல் தொடரில், தங்களின் முதல் வெற்றியை அவர்கள் பதிவு செய்துள்ளனர். கடின இலக்காக இருந்த போதும், நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவுக்கு எதிராக, இப்படி ஒரு வெற்றியை பெற்றுள்ள லக்னோ அணிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். கடைசியில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும், சிஎஸ்கே சொதப்ப, இந்த சீசனில் இரண்டாம் தோல்வியையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்
முதல் போட்டியில், 50 ரன்கள் அடித்து அசத்தி இருந்த இளம் வீரர் ஆயுஷ் படோனி, நெருக்கடியான நேரத்தில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு, வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். இந்நிலையில், அசாத்திய வெற்றியை லக்னோ அணி பெறும் தருவாயில், அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கடைசி ஓவரின் முதல் பந்தில், படோனி சிக்ஸர் அடித்ததும் வெளியே இருந்த கவுதம் கம்பீர், உடனடியாக எழுந்து ஆக்ரோஷமாக கத்தினார். ஐபிஎல் இறுதி போட்டியை வென்றதை போன்று, ஒரு ஆக்ரோஷம் அவரிடம் தென்பட்டதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து, இரண்டு முறை அந்த அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளவர் கம்பீர். தற்போதைய லக்னோ அணியில், படோனி உள்ளிட்ட வீரர்களின் தேர்விலும் கம்பீரின் பங்கு பெரியது. தன்னுடைய அணி, முதல் வெற்றியை மிக அபாரமாக பதிவு செய்யும் தருவாயில், அவர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Virat Kohli : கேட்சை பிடிச்சுட்டு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்த கோலி.. வைரலாகும் Pic..!