ஃபைனல் 'மேட்ச்'ன்னு கூட பாக்காம,,.. 'ரோஹித்' எடுத்த தில்லான 'முடிவு'... "சொன்ன மாதிரியே செஞ்சும் காட்டிட்டாரு!!!.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது மோதி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை டெல்லி அணி தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டியோனிஸ் ரன் எடுக்காமல் போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, தனது அடுத்த ஓவரிலும் போல்ட், ரஹானேவை அவுட் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து, வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத அந்த சமயத்தில் திடீரென மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, 4 ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான ஜெயந்த் யாதவிடம் கொடுத்தார்.
அந்த ஓவரில் ஜெயந்த் யாதவ் திட்டமிட்டபடி தவானின் விக்கெட்டை வீழ்த்தினார். ஏற்கனவே தவான், ஜெயந்த் யாதவ் பந்தில் வீழ்வார் என ஏற்கனவே பலரும் கணித்து வந்த நிலையில், அது சரியாக நிகழ்ந்தது. இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 'டெல்லி அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் ஜெயந்த் யாதவ் சிறந்த ஆப்சன்' என நேற்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்றைய போட்டியில் ராகுல் சாஹருக்கு பதிலாக ஜெயந்த் யாதவை அணிக்கு கொண்டு வந்ததால் அதற்கான பலனும் அமைந்துள்ளது. தவான் அதிக நேரம் களத்தில் நிலைத்திருந்தால் நிச்சயம் பெரிய ஸ்கோரை அடித்து மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்திருப்பார். ஆனால், மிகக் கச்சிதமான முடிவால் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

மற்ற செய்திகள்
