‘செம’ சர்ப்ரைஸ்.. ஷர்துல் தாகூரின் நிச்சயதார்த்தத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய ‘பிரபல’ இந்திய வீரர்.. வைரலாகும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ஷர்துல் தாகூரின் நிச்சயதார்த்தத்திற்கு இந்திய வீரர் ஒருவர் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஷர்துல் தாகூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாகவும் ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது நீண்ட நாள் காதலியான மித்தாலி பருல்கர் என்பவருடன் ஷர்துல் தாகூருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த விழாவில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 75 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதில் இந்திய அணியின் டி20 கேப்டனான ரோஹித் ஷர்மா நேரில் சென்று ஷர்துல் தாகூருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நிச்சயதார்த்தம் மட்டுமே தற்போது நடைபெற்றுள்ளதாகவும், திருமணம் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
