'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 21, 2019 11:19 PM

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6-ந்தேதியில் இருந்து டிசம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து டிசம்பர் 22-ந்தேதி வரை நடக்கிறது.

Fans Unhappy over Sanju Samso\'s exclusion from WI Squad

இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்தது.  இதில் காயம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்த புவனேஷ்வர் குமார் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல முகம்மது ஷமியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வழக்கம்போல தோனி அணியில் இல்லை. அதேபோல அஸ்வின், சஞ்சு சாம்சன், பும்ரா ஆகியோரது பெயர்களும் அணியில் இல்லை. இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது மிகவும் திறமையான சஞ்சு சாம்சனை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என ட்விட்டரில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ட்விட்டரில் தற்போது #SanjuSamson,  #BringBackDhoni ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றன. தொடர்ந்து சஞ்சு சாம்சன் அணித்தேர்வில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

டி20 தொடருக்கான வீரர்கள் விவரம்:

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஷிவம் டுபே, 9. வாஷிங்டன் சுந்தர், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.

ஒருநாள் தொடருக்கான வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. ஷிவம் டுபே, 9. கேதர் ஜாதவ், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.

 

Tags : #CRICKET #BCCI